திமுக சார்பில் திராவிட அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கும் நோட்டீஸ்கள் வழங்கல்!

புதுக்கோட்டையில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் என்னும் நிகழ்ச்சியில் டிவிஎஸ் அருகே உள்ள கடைகளில் திமுக சார்பில் திராவிட அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கும் நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன.

Update: 2024-02-29 10:41 GMT
புதுக்கோட்டை திமுக நகரச் செயலாளர் செந்தில்குமார் தலைமையில் திமுகவை சேர்ந்த முக்கிய பொறுப்பாளர்கள் நிகழ்ச்சியில் பங்கு கொண்டனர் இதில் திராவிட மாடல் அரசின் 2 ஆண்டு சாதனைகளை விளக்கும் நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன. குறிப்பாக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் 17 லட்சம் பள்ளி குழந்தைகள் பயன்பாடு முதலமைச்சர் காலை உணவு திட்டம் 26 லட்சம் மாணவர்கள் திறன் பயிற்சி வழங்கும் நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்திய சாதனைகளை விளக்கும் நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன. டிவிஎஸ் கலீப் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளுக்கு சென்று திமுக அரசின் சாதனைகளை விளக்கி வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இது போன்ற பல்வேறு நலத்திட்டுகள் திட்டங்கள் தொடர்ந்து வழங்கிட திமுகவை ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
Tags:    

Similar News