திமுக கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் முன்னாள் எம்எல்ஏ ஆலோசனைகூட்டம்

கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுகவினர் அனைவரும் பங்கேற்பது குறித்து தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ.சுப்ரமணி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.;

Update: 2024-02-06 07:13 GMT

இன்று தர்மபுரி திமுக கட்சி அலுவலகத்தில் மாநில உரிமைகளை காத்திட ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைநகரங்களில் நடைபெறுகிறது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுகவினர் அனைவரும் திரளாக பங்கேற்பது குறித்து தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ.சுப்ரமணி EX.MLA அவர்களின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் தர்மபுரி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் திரு.குமார் அவர்கள் கலந்து கொண்டு திமுக தொண்டர்கள் பெருந்திரளராக கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். 

இந்த நிகழ்வில் மாவட்ட கழக பொருளாளர் திரு.தங்கமணி துணை செயலாளர் திரு .உமாசங்கர், பொதுக்குழு உறுப்பினர் திரு நட்ராஜ், நகர செயலாளர் திரு நாட்டான் மாது, பாலக்கோடுகளுக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு கருணாநிதி, நல்லம்பள்ளி முன்னாள் ஒன்றிய கழக செயலாளர் திரு பி.சி துரைசாமி மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News