மேற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம்

மேற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் சேலத்தில் 27-ந்தேதி நடக்கும் என மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Update: 2024-05-23 12:08 GMT

மேற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் சேலத்தில் 27-ந்தேதி நடக்கும் என மாவட்ட செயலாளர் டி.எம்.செல்வகணபதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.


சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.எம்.செல்வகணபதி ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகிற 27-ந்தேதி மதியம் 3 மணிக்கு மாவட்ட அலுவலகமான கலைஞர் மாளிகை வீரபாண்டியார் அரங்கில் நடக்கிறது. இதற்கு அவைத்தலைவர் தங்கமுத்து தலைமை தாங்குகிறார். இந்த கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், இன்னாள், முன்னாள் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி, விவசாய அணியினர் கலந்து கொள்ள வேண்டும். மேலும் விவசாய தொழிலாளர் அணி, மருத்துவ அணி, வக்கீல் அணி, பொறியாளர் அணி, நெசவாளர் அணி, தொண்டர் அணி, வர்த்தக அணி, இலக்கிய அணி, கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை, மீனவர் அணி, சிறுபான்மை நலக்குழு உரிமைப்பிரிவு, தகவல் தொழில் நுட்ப அணி, சுற்று சூழல் அணி, தொழிலாளர் அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி, அமைப்பு சாரா ஓட்டுனர் அணி, அயலக அணி, ஆதிதிராவிடர் நலக்குழு ஆகியவற்றின் மாவட்ட அமைப்பாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News