திமுக முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் நினைவு தினம்: மாட்டு வண்டிபந்தயம்

திமுக முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன் 13 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

Update: 2023-12-21 09:33 GMT

சீறிப்பாய்ந்த மாடுகள் 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மணமேல்குடி தாலுகா மணலூர் ஊராட்சி திமுக முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன் 13 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் புதுக்கோட்டை,தஞ்சை, திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்திலிருந்து 36 ஜோடி மாடுகள் போட்டியில் பங்கேற்றன.

2 பிரிவுகளாக நடைபெற்ற பந்தயத்தில் பெரிய மாடு 10 சின்னமாடு பிரிவில் 26 ஜோடி மாடுகளும், போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன.போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாடுகளுக்கு ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது.

மேலும் மாடுகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. சாலையின் இருபுறத்திலும் ரசிகர்கள் திரண்டிருந்து போட்டியை கண்டு ரசித்தனர் மணமேல்குடி காவல்த்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

Similar News