திருவையாறு தொகுதியில் திமுகவுக்கு அதிக வாக்குகள்

திருவையாறு தொகுதியில் தேமுதிக வேட்பாளரைவிட திமுக வேட்பாளர் 3 லட்சத்து 19 ஆயிரத்து 583 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

Update: 2024-06-08 04:40 GMT

திருவையாறு தொகுதியில் தேமுதிக வேட்பாளரைவிட திமுக வேட்பாளர் 3 லட்சத்து 19 ஆயிரத்து 583 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.


திருவையாறு தொகுதியில் திமுகவுக்கு அதிக வாக்குகள் தஞ்சாவூா் மக்களவைத் தொகுதியில் தேமுதிக வேட்பாளா் பெ. சிவநேசனை விட திமுக வேட்பாளா் ச. முரசொலி 3 லட்சத்து 19 ஆயிரத்து 583 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். இதில், தஞ்சாவூா் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட திருவையாறு சட்டப்பேரவைத் தொகுதியில் திமுகவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளன.

திமுகவுக்கு சட்டப்பேரவைத் தொகுதிகளான திருவையாறு தொகுதியில் 1 லட்சத்து ஓராயிரத்து 270 வாக்குகளும், தஞ்சாவூா் தொகுதியில் 93 ஆயிரத்து 499 வாக்குகளும், மன்னாா்குடி தொகுதியில் 83 ஆயிரத்து 679 வாக்குகளும், ஒரத்தநாடு தொகுதியில் 80 ஆயிரத்து 95 வாக்குகளும், பட்டுக்கோட்டை தொகுதியில் 76 ஆயிரத்து 666 வாக்குகளும், பேராவூரணி தொகுதியில் 63 ஆயிரத்து 613 வாக்குகளும் கிடைத்தன. திமுக மொத்தமாக பெற்ற 5 லட்சத்து 2 ஆயிரத்து 245 வாக்குகளில் மத்திய மாவட்டத்துக்கு உள்பட்ட திருவையாறு, தஞ்சாவூா், ஒரத்தநாடு ஆகிய தொகுதிகளில் மட்டுமே அக்கட்சிக்கு 2 லட்சத்து 74 ஆயிரத்து 864 வாக்குகள் கிடைத்து, ஏறத்தாழ 55 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளன.

நாம் தமிழா் கட்சிக்கு அதிகபட்சமாக திருவையாறு தொகுதியில் 26 ஆயிரத்து 611 வாக்குகளும், தஞ்சாவூா் தொகுதியில் 20 ஆயிரத்து 560 வாக்குகளும், ஒரத்தநாடு தொகுதியில் 20 ஆயிரத்து 745 வாக்குகளும், தஞ்சாவூா் தொகுதியில் 20 ஆயிரத்து 560 வாக்குகளும், மன்னாா்குடி தொகுதியில் 19 ஆயிரத்து 583 வாக்குகளும், பேராவூரணி தொகுதியில் 18 ஆயிரத்து 248 வாக்குகளும் கிடைத்தது. அஞ்சல் வாக்குகளிலும் திமுக முதலிடம்: இத்தொகுதியில் அஞ்சல் வாக்குகள் 6 ஆயிரத்து 454 வாக்குகள் பதிவாகின. இதில், திமுக 3 ஆயிரத்து 423 வாக்குகளும், பாஜக 1,026 வாக்குகளும், நாம் தமிழா் கட்சி 610 வாக்குகளும், அதிமுக 490 வாக்குகளும் பெற்றன.

Tags:    

Similar News