திமுக தேர்தல் வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை.

திமுக அரசு சட்டமன்ற தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. மாறாக விலைவாசியை உயர்த்தி,சொத்து வரி மின் கட்டணத்தை உயர்த்தி பொதுமக்களுக்கு துயரத்தை கொடுத்து உள்ளார்கள் என அதிமுக மாவட்ட செயலாளர் சீனிவாசன் பேசினார்.;

Update: 2024-02-19 07:32 GMT

அதிமுக தெருமுனை பிரச்சாரம்

திருச்சி மாநகர், மாவட்டம் ஏர்போர்ட் பகுதி சார்பில் அதிமுக தெருமுனை பிரச்சாரக் கூட்டம் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பகுதி செயலாளர் ஏர்போர்ட் விஜி தலைமை தாங்கினார். ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் ஜோதிவாணன், திருச்சி மாநகர், மாவட்ட ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் என்ஜினியர் கார்த்திகேயன், மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் கவுன்சிலர் கோ.கு.அம்பிகாபதி, நிர்வாகிகள் அய்யப்பன், பாலாஜி, வெல்லமண்டி பெருமாள், சகாபுதீன், செல்லப்பா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள். கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் அமுதா பேசினார். கூட்டத்தில் திருச்சி மாநகர்,மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசன் கலந்து கொண்டு பேசும்பொழுது:- திமுக அரசு சட்டமன்ற தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. மாறாக விலைவாசியை உயர்த்தி,சொத்து வரி மின் கட்டணத்தை உயர்த்தி பொதுமக்களுக்கு துயரத்தை கொடுத்து உள்ளார்கள். வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் பொதுமக்கள் நிச்சயம் திமுகவுக்கு பாடம் புகட்டுவார்கள் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெறுவார் என்று பேசினார்.
Tags:    

Similar News