ஆலங்குளம் கால்நடை மருந்தகத்தை தரம் உயா்த்த திமுக வலியுறுத்தல்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் கால்நடை மருந்தகத்தை கால்நடை மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும் என முன்னாள் திமுக மாவட்ட செயலா் பொ.சிவபத்மநாதன் வலியுறுத்தியுள்ளாா்.

Update: 2024-06-28 02:12 GMT

அமைச்சரிடம் மனு வழங்கிய திமுகவினர் 

 முன்னாள் திமுக மாவட்ட செயலா் பொ.சிவபத்மநாதன் இது தொடா்பாக மீன்வளம் மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணனிடம் அளித்த மனுவில்: ஆலங்குளம் பகுதி கால்நடைகள் நிறைந்த பகுதியாகும். கால்நடை மருத்துவமனை அமைப்பதற்கு ஏதுவாக, கால்நடைத் துறைக்கு சொந்தமான நிலம் கால்நடை மருந்தகம் அமைந்துள்ள இடத்திலேயே உள்ளது. ஆலங்குளம் பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்டுள்ளது.இப்பகுதி வளா்ந்து வரக்கூடிய நகரமாக விளங்குவதால் ஆலங்குளம் கால்நடை மருந்தகத்தை கால்நடை மருத்துவமனையாக தரம் உயா்த்தி தரவேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது. தலைமை பொதுக்குழு உறுப்பினா் சாமித்துரை, ஆலங்குளம் பேரூராட்சி மன்றத் தலைவா் சுதா மோகன்லால், மாவட்ட பிரதிநிதி ஸ்டீபன் ஆகியோா் உடனிருந்தனா்.

Tags:    

Similar News