கள்ளக்குறிச்சி விவகாரத்தை பேச திமுக பயப்படுகிறது - அண்ணாமலை!

திமுக கள்ள குறிச்சி விவகரத்தை பேச பயப்படுகிறது. இதில் உள்ள தொடர்புக்கு வெளியில் வந்த விடும் என பயப்படுகின்றனர் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

Update: 2024-06-23 05:34 GMT

கைது செய்யப்பட்ட பாஜகவினர் 

கள்ள சாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் இதனை கண்டித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கைது செய்யபட்டு ராம்நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைக்கபட்டு உள்ளவர்களை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் வித்தியாசமான சூழலில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிக்கொண்டு இருப்பதாகவும் தமிழகம் முழுவதும் மக்கள் சார்பாக இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று இருப்பதாகவும் பாஜகவினர் போராட்டம் செய்யவிடாமல் பல இடங்களில் தடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளது தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறை என தெரிவித்தார்.முறைப்படி பாஜக தலைவர்கள் அந்தந்த மாவட்டத்தில் போலீசாரிடம் மனு அளித்து போராட்டம் நடத்திய நிலையில் இன்று கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டு பா.ஜ.கவினர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

திமுக கள்ள குறிச்சி விவகரத்தை பேச பயப்படுவதாகவும் இதில் உள்ள தொடர்புக்கு வெளியில் வந்த விடும் என பயப்படுகின்றனர் என்றார்.தமிழகத்தில் 4661 நூலகங்கள்,2027 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளது ஆனால் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட டாஸ்மாக் இருப்பதாகவும் மதுவுக்கு அடிமையாக இருக்கக்கூடிய ஒரு தலைமுறையை உருவாக்கி உள்ளனர் எனவும் இது கள்ள சாராய சாவு என்பதை விட கள்ள சாராயத்தால் திமுக அரசு நடத்திய கொலை என்று சொல்ல வேண்டும் என்றார். காவல் நிலையம் நீதிமன்றம் அருகிலேயே கள்ளக்குறிச்சியில் சாதாரணமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாகவும் மரணமடைந்த நபர்கள் தினமும் குடிப்பவர்கள் இல்லை இவர்கள் டாஸ்மாக்கில் மதுபானம் வாங்கி குடிக்கும் இவர்கள் கட்டுப்படியாகத காரணமாக பாக்கெட் சாராயம் குடித்து உள்ளனர் எனவும் 55 பேர் உயிரிழந்தவர்களில் 53 பேர் பழங்குடி, பட்டியல் இன மக்கள் என்றார்.

திராவிட மாடல் அரசு இந்தியாவுக்கு தமிழகம் வழிகாட்டி என்பதெல்லாம் மாறி தற்பொழுது தமிழகம் தலை குனிந்து நின்று கொண்டிருக்கிறோம் எனவும் இதைக் கண்டித்து பேசக்கூட உரிமை மறுக்கப்படுவதாகவும் ஜனநாயகத்திற்கும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான கட்சி திமுக என்றார்.சமூக வலைதளங்களில் இவற்றையெல்லாம் கோடிக்கணக்கான மக்கள் பார்த்து கொண்டிருப்பதாக கூறியவர், தமிழக ஆளுநரிடம் தொலைபேசியில் அழைத்து புகார் அளித்திருப்பதாகவும் பேச்சு சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது எனவும் கருத்து சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் வரும் திங்கட்கிழமை காலை 11 மணிக்கு பாஜக குழு ஆளுநரை நேரில் சந்தித்த்து புகார் அளிக்க இருப்பதாக தெரிவித்தார்.

கள்ள சாராய விவகாரத்தில் திமுகவிற்கு இருக்கும் தொடர்பையும் ஆளுநரிடம் சொல்ல இருப்பதாகவும் இந்த அரசு தொடர்ந்து இருக்க வேண்டுமா என்பதையும் சொல்ல இருக்கிறோம் என்றார்.இதற்கு முன்பு மரக்காணத்தில் நடந்த சம்பவத்தில் முதல் குற்றவாளிக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் கேக் ஊட்டி விட்ட புகைபடம் இருப்பதாகவும் திமுக தலைவர்களுக்கும் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களுக்கும் இருக்கும் தொடர்பை வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதற்காக சிபிஐ விசாரணை தேவைப்படுகிறது இதை ஆளுநரிடமும் முன் வைக்க இருப்பதாகவும் இப்போது சிபிஐ விசாரணை செய்ய வேண்டும் என்றால் மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும். நீதிமன்றம் அல்லது மாநில அரசிடம் அனுமதி பெற்று தான் சிபிஐ விசாரணைக்கு வர முடியும் சிபிஐ விசாரணை நடந்தால் மட்டுமே முழு உண்மை தெரியவரும் என்றார்.

தமிழகத்தில் வார,வாரம் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெறும் என முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே கூறி உள்ள நிலையில் இதுவரை எத்தனை கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்று உள்ளது அதில் முதல்வர் பங்கேற்றது எத்தனை கூட்டங்கள் அந்தக் கூட்டத்தின் மினிட் நகல்களை முதல்வர் அளிக்க வேண்டும் என்றார்.கம்யூனிஸ்ட் கட்சி திமுகவை குற்றம் சொல்லாதீர்கள் என்கின்றனர்.ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு குக்கிராமத்தில் ஏதாவது நடந்தால் குதிக்க தமிழக எம்பிக்கள் கள்ளகுறிச்சியில் 55 பேர் இறந்து உள்ள நிலையில் அமைதியாக இருக்கின்றனர்.திமுகவின் கூட்டணி கட்சிகள் முழு அடிமைகள் என்பதை மக்களுக்கு உணர்த்தி இருக்கின்றனர் எனவும் ஒரு கண்டன குரல் கூட இதுவரை காணவில்லை.இதற்கு முன் யார் யாரோ கிளம்பி வருவார்கள்.

இப்பொழுது யாரையும் காணவில்லை.இதுபோன்ற பெரிய நிகழ்வு தமிழகத்தில் நடக்கவில்லை எனவும் முதல்வர் ஏன் இதுவரை அங்கு செல்லவில்லை என கேள்வி எழுப்பியவர் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டத்தினை முதல்வர் கூட்டி நடத்தி இருக்க வேண்டும் முதல்வருக்கு அரசியல் அனுபவம் இருக்கிறது. முதல்வருக்கு நாங்கள் இதை சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.முதல்வருக்கு தெரியும் அவரால் அந்த ஊருக்கு செல்ல முடியாது மக்கள் ரோட்டுக்கு வந்து விடுவார்கள் என்று.ஸ்டாலின் முதலில் கள்ளக்குறிச்சிக்கு செல்லட்டும் அதன் பின்பு அவர் பேசட்டும். பார்க்கலாம் என்றார். கள்ளக்குறிச்சி மையப்பகுதியில் உயிரிழப்பு சம்பவம் நடைபெற்றுள்ளதால் தட்டி கேட்கிறோம் இதில் என்ன அரசியல் இருக்கிறது? எனவும் சென்னையில் தெரு நாய் செத்துப் போனால் ஏன் பிரதமர் வரவில்லை என கேட்கும் கூட்டம் 55 பேர் இறந்ததற்கு முதல்வர் ஏன் செல்லவில்லை என கேட்க கூடாதா?என்றார்.

பட்டியலின் தேசிய ஆணையம் தமிழகத்திற்கு வரவேண்டும் எனவும் 43 பேர் பட்டியல் இனத்தை சார்ந்தவர்கள் 10 பேர் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள் அந்த ஆணையம் உடனடியாக வந்து பார்த்து மாநில அரசை அறிவுறுத்த வேண்டும்.கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு காசு என்பது இன்றைய விவாதம் கிடையாது.பல வீடுகளில் நாளை காலை அடுப்பு எரியாது. கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர குடித்த பிறகு நிவாரணம் கொடுப்பது சரியா ?தவறா? என்பதற்குள் போகவில்லை.இன்று 40 குடும்பத்தினருக்கு பாஜக சார்பில் ஒரு லட்ச ரூபாய் நிதி கொடுக்கப்பட்டுள்ளது நாங்கள் மனிதாபிமான அடிப்படையில் கொடுத்திருக்கிறோம் என்றார். இடைத்தேர்தலில் இது எதிரொலிக்குமா என்பது தெரியவில்லை எனவும் பாராளுமன்ற தேர்தலிலேயே 40க்கு 40 கொடுத்து இருக்கிறார்கள்.இந்த விக்கிரவாண்டி தேர்தலில் இது எதிரொலிக்க வேண்டும் என்பது எங்கள் ஆசை எனவும் கூட்டணி கட்சியான பா.ம.க விக்கிரவாண்டி தேர்தலில் போட்டியிடுவதாகவும் தெரிவித்தார்.

போராட்டத்திற்கு தான் வருவதற்கு முன்னரே அனைவரையும் போலீசார் கைது செய்து அழைத்து வந்து விட்டதாகவும் 4 மணி முதலே பேருந்துகளை கொண்டு வந்து அனைவரையும் கைது செய்ய ஆரம்பித்து விட்டதாகவும் பாஜக தமிழக அரசியல் வரலாற்றில் ஏதாவது ஒரு பொது சொத்தை சேதப்படுத்தி இருக்கின்றதா என கேள்வி எழுப்பினார்.மீண்டும் போராட்டம் நடத்த நீதிமன்றத்தை நாடி இருப்பதாகவும் இன்று நீதிமன்றத்தை நாடிய நிலையில் அனைத்து நீதிபதிகளும் ஒரு செமினாரில் இருந்ததால் மனு விசாரணைக்கு வரவில்லை என்றவர் நீதிமன்றத்தில் அமர்வு வரும் பொழுது எங்களுடைய மனு விசாரிக்கப்படும். கண்டிப்பாக நீதிமன்ற அனுமதி பெற்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் நீதிமன்ற அனுமதியுடன் கண்டிப்பாக மீண்டும் ஒருமுறை போராட்டம் நடத்துவோம் என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

Tags:    

Similar News