திமுகவுக்கு திராவிட தமிழர் கட்சி ஆதரவு

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவளித்து பரப்புரை மேற்கொள்ள இருப்பதாக திராவிட தமிழர் கட்சி அறிவித்துள்ளது.

Update: 2024-03-27 03:58 GMT

மைதீன்கானுடன் திராவிட தமிழர் கட்சியினர் 

பாராளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு திராவிட தமிழர் கட்சி தலைவர் வெண்மணி ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழக முதல்வரிடம் வெண்மணி கொடுத்த ஆதரவு நகல் கடிதத்தை திருநெல்வேலி மாவட்ட திராவிட தமிழர் கட்சி நிர்வாகிகள் நேற்று (மார்ச் 26) இரவு நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் மைதீன்கானை நேரில் சந்தித்து வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் திமுகவினர், திராவிட தமிழர் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News