திமுக ஐ.டி.விங்க் தவறான தகவல்களை பரப்புகிறது - எஸ்.பி.வேலுமணி

திமுக ஐ.டி.விங்க் தவறான தகவல்களை பரப்பபி வருகிறது என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.

Update: 2024-05-20 10:59 GMT

 திமுக ஐ.டி.விங்க் தவறான தகவல்களை பரப்பபி வருகிறது என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறினார்.

கோவை: முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது பேசிய அவர் தமிழகத்தில் தற்போது குடிநீர் பிரச்சனை தலைவிரித்து ஆடுவதாகவும் கோவை மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை தீர்க்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கனவே மனு கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.

அதிமுக ஆட்சியில் தொடங்கபட்ட பில்லூர் மூன்றாவது குடிநீர் திட்டத்தை செயல்படுத்தாமல் திமுக அரசு முடக்கி வைத்துள்ளதாக குற்றம் சாட்டிய அவர் இதனால் கொங்கு பகுதியில் செயற்கையான குடிநீர் பஞ்சம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது எனவும் மக்களுக்கு தேவையான குடிநீர் திட்டங்களை செயல்படுத்தி குடிநீர் விநியோகத்தை சீராக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். திமுக ஐடி குழுவினர் தவறான செய்திகளை பரப்புவதாகவும் அதனை ஊடகங்களும் செய்திகளாக பதிவிடுவதாக தெரிவித்தவர் அதிமுகவின் பல்வேறு உக்கட்சி பூசல்கள் இருப்பதாக பல ஊடகங்கள் கற்பனையாக செய்திகள் வெளியிடுவதாக குற்றம் சாட்டினார்.

கட்சியை எடப்பாடி.பழனிச்சாமி சிறப்பாக வழிநடத்தி காப்பாற்றி வருவதாக கூறியவர் கட்சிக்குள் எந்த பிரச்சனை வந்தாலும் அனைத்து மூத்த நிர்வாகிகளிடமும் கலந்து ஆலோசித்த பின் எடப்பாடி பழனிச்சாமி எந்த முடிவும் எடுப்பார் என தெரிவித்தார்.கடந்த மூன்று ஆண்டு திமுக ஆட்சியில் எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை என குற்றம் சாட்டிய எஸ்.பி.வேலுமணி 2026 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியை பொறுப்பு ஏற்றவுடன் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும் என்றார்.

Tags:    

Similar News