ஸ்ரீவில்லிபுத்தூரில் திமுக வழக்கறிஞர் அணியினர் ஆர்ப்பாட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்றத்தின் முன்பு திமுக வழக்கறிஞர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.;

Update: 2024-07-05 08:40 GMT
ஸ்ரீவில்லிபுத்தூரில் மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்றத்தின் முன்பு திமுக வழக்கறிஞர் அணியினர் ஆர்ப்பாட்டம்

 விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள மாவட்ட நீதிமன்ற முன்பு திமுக வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட வழக்கறிஞர்கள் அணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசு கொண்டு வந்து கொண்டு வந்துள்ள சட்ட திருத்தங்களுக்கு எதிராக நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் தமிழ்நாடு- பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு 8 ஆம் தேதி வரை நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள மாவட்ட நீதிமன்றத்தின் முகப்பில் விருதுநகர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர்கள் அணி சார்பில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற வழக்கறிஞர்கள் மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்ட திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக வழக்கறிஞர்கள் அணியைச் சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News