வேட்பாளருக்கு வரவேற்பளிக்க குவிந்த திமுகவினர் - போக்குவரத்து பாதிப்பு
ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்த திமுக வேட்பாளருக்கு வரவேற்பு கொடுப்பதற்காக அக்கட்சியினர் குவிந்ததால் ஒரு மணி நேரத்துக்கு மேலாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தென்காசி தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர். ராணி சாலை மார்க்கமாக மதுரை டு கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் காரில் மூலம் அழகாபுரி மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிக்கு வருகை தந்த நிலையில் அவருக்கு திமுக கட்சியினர் வரும் வழியில் வரவேற்பளித்தனர். வேட்பாளர் வருவதற்கு முன்பே சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பு தேசிய நெடுஞ்சாலையில் அக்கட்சியினர் குவிந்து காத்திருந்ததால் போக்குவரத்து பாதிப்படைந்தது. வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
போக்குவரத்தை சரி செய்ய காவல்துறையினர் சிரமத்திற்கு உள்ளாகினர். தேர்தல் ஆணையம் அனுமதிக்கப்பட்ட கார்களுக்கு அதிகமாக வேட்பாளர் வந்ததாலும், போக்குவரத்து இடையூறு செய்ததாலும் திமுக கட்சியினர் மற்றும் வேட்பாளர் மீது தேர்தல் ஆணையம் வழக்கு பதிவு செய்யுமா என பொதுமக்களிடம் கேள்வி எழுந்துள்ளது.