முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய திமுகவினர் !
தர்மபுரி கடைவீதி பகுதியில் கலைஞரின் 101 வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக மாவட்ட இளைஞரணி சார்பில் முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.;
நலத்திட்ட உதவி
மறைந்த முன்னாள் தமிழக முதல்அமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களின் 101- வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆர்.பி.முத்தமிழன் ஏற்பாட்டில் தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ.சுப்ரமணி, தலைமையில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.ஜி.எஸ் வெங்கடேஸ்வரன் மற்றும் இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் என்.எஸ். கலைச்செல்வன், கே.ஆர்.சி .செல்வராஜ் , கோ.அசோக்குமார் ஆகியோர் முன்னிலையில் தர்மபுரி அன்னை விசாலாட்சி மாதம்மாள் முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் தங்கமணி, மாவட்டத் துணைச் செயலாளர் ரேணுகாதேவி, முன்னாள் நகர செயலாளர் மே, அன்பழகன், வழக்கறிஞர் சி.எம். ரமேஷ், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணிய அமைப்பாளர் ஹரி விக்னேஷ், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர்கள் சாந்த ரூபி, மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் துணை அமைப்பாளர் வினோத்குமார்,இளைஞர் அணி அமைப்பாளர்மா. தங்கம் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.