திருப்பூரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் திமுக எம்எல்ஏ

திருப்பூரில் வேட்பாளர் அறிவிக்கும் முன்பாகவே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் திமுக எம்எல்ஏ,மேயர் உள்ளிட்டோர் இஸ்லாமியர்களை சந்தித்து தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர்.

Update: 2024-03-15 11:48 GMT

பிரச்சாரம் செய்த திமுக எம்எல்ஏ

திருப்பூரில் வேட்பாளர் அறிவிக்கும் முன்பாகவே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் திமுக -  எம்எல்ஏ , மேயர் உள்ளிட்டோர் இஸ்லாமியர்களை சந்தித்து தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி நாளை அறிவிக்கப்பட உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளுமே தேர்தல் பணியில் தங்களை தீவிரப் படுத்தி உள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக திமுகவில் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான செல்வராஜ் தலைமையில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் இன்று திருப்பூர் பெரிய பள்ளிவாசல் வீதியில் உள்ள பெரிய பள்ளிவாசல் மசூதியில் ரம்ஜான் மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டு வெளியே வந்தவர்களிடம்,

திமுக அரசு பொறுப்பேற்ற பின்  இஸ்லாமிய மக்களுக்காக செய்யப்பட்டுள்ள வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த துண்டு பிரசுரம் வழங்கி நாடாளுமன்ற தேர்தலுக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்களிக்க கோரி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் கட்சியில் அதிரடி மாற்றங்கள் இருக்கும் என திமுகவின் தலைவரும் முதல் வருமான மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் திமுகவினர் கூட்டணி கட்சிக்காக தீவிர பரப்புரையில் ஈடுபட துவங்கியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News