திமுக பாக முகவர்கள் கூட்டம் : அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
தூத்துக்குடியில் நடைபெற்ற திமுக பாக முகவர்கள் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். ;
Update: 2024-03-21 02:46 GMT
தூத்துக்குடியில் நடைபெற்ற திமுக பாக முகவர்கள் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.
தூத்துக்குடி கலைஞர் அரங்கில் தூத்துக்குடி மாநகரம் போல்பேட்டை பகுதிக்கு உட்பட்ட திமுக முகவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான பி.கீதாஜீவன் ஆலோசனைகள் வழங்கி உரையாற்றினார். இக்கூட்டத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி, திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின், பகுதி செயலாளர் ஜெயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.