குழித்துறையில் திமுக சார்பில் கைபெண்ணுக்கு இலவச வீடு வழங்கல்
குழித்துறையில் திமுக சார்பில் கைம்பெண்ணுக்கு இலவச வீடு வழங்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகர திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கணவனை இழந்த விதவை ஒருவருக்கு திமுக சார்பில் இலவச வீடு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
குழித்துறை நகராட்சி ஆறாம் வார்டு பகுதியை சேர்ந்தவர் சாரிகா. இவருடைய வீடு மிகவும் பழமையான வீடாகும். கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு அந்த வீட்டில் வைத்து சாரிகாவின் கணவரை ஏதோ விஷ ஜந்து கடித்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து குழித்துறை நகர திமுக சார்பில் சுமார் 7 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய வீடு கட்டி கொடுக்கப்பட்டது.
இந்த வீட்டை சாரிகாவிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நகர திமுக செயலாளர் வினுகுமார் தலைமை வகித்தார். தமிழக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வீட்டை பயனாளிக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் மரிய சிசுகுமார், பொருளாளர் ததேயு பிரேம் குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் ரெமோன் மனோதங்கராஜ் மற்றும் நிர்வாகிகள் பப்புசன், டேவிட் ராஜபோஸ், ஷைனி கார்டன், ஷீலா குமாரி, பெர்லின் தீபா உட்பட பலர் கலந்து கொண்டனர்.