திமுக மூத்த நிர்வாகி நினைவு தினம் - நலத்திட்ட உதவிகள் வழங்கல்
வேதாரண்யம் திமுகவின் மூத்த முன்னோடி மறைந்த இராஜதுரையின் பத்தாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு வேட்டி, சேலை வழங்கப்பட்டது.;
Update: 2024-06-30 02:49 GMT
இராஜதுரை நினைவு தினம்
வேதாரண்யம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த முன்னோடி மறைந்த இராஜதுரை பத்தாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தகட்டூர் கடைத்தெருவில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு வேட்டி சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதனை வேதாரண்யம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் மருதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயக்குனருமான உதயம் வே.முருகையன வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஒன்றிய ஊராட்சி கிளைக் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், வர்த்தகர்களும், ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.