நரிக்குறவர்களுக்கு தற்காலிக வீடுகள் அமைக்கும் திமுக
நெல்லை நரிக்குறவர் காலனியில் கருணாநிதியின் 101வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக சார்பில் தற்காலிக வீடுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
Update: 2024-05-30 06:13 GMT
நெல்லை மாநகர பேட்டை நரிக்குறவர் காலனியில் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் மக்கள் குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இதில் ஏழு குடும்பத்தினர் தார் பாயில் அமைக்கப்பட்டுள்ள வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கருணாநிதியின் 101வது பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை மாநகர திமுக சார்பில் தற்காலிக வீடுகள் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது.