காமராஜர் பிறந்தநாள் விழாவில் திரளாக கலந்து கொள்ள த.மா.கா. தலைவர் அறிக்கை !
திருச்சியில் நாளை மறுநாள் நடைபெறும் காமராஜர் பிறந்தநாள் விழாவில் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என த.மா.கா. கிழக்கு மாவட்ட தலைவர் அறிக்கை விடுத்துள்ளார்.
By : King 24x7 Angel
Update: 2024-07-12 05:54 GMT
சேலம் கிழக்கு மாவட்ட த.மா.கா. தலைவர் வி.எம்.சொக்கலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருச்சி உழவர் சந்தை திடலில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காமராஜர் பிறந்த நாள் விழா த.மா.கா. சார்பில் கொண்டாடப்படுகிறது. த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. தலைமை தாங்குகிறார். விழாவில் பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, பா.ம.க. தலைவர் அன்புமணி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.
விழாவில் த.மா.கா. நிர்வாகிகள், தொண்டர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். மேலும் விழாவுக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என 250 பேர் 10 வாகனங்களில் திருச்சிக்கு சென்று விழாவை சிறப்பிக்க இருக்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.