தேர்தலில் 200+ தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் : மேயர்
சட்டமன்றத் தேர்தலில் 200+ தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் என மேயர் ஜெகன் பொியசாமி தெரிவித்தார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக 200 தொகுதி இலக்கையும் கடந்து வெற்றி பெற அனைவரும் பணியாற்ற வேண்டும் என்று மேயர் ஜெகன் பொியசாமி வேண்டுகோள் விடுத்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி மேயரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான ஜெகன் பெரியசாமி தனது பிறந்தநாளையொட்டி போல்பேட்டையில் உள்ள தனது தந்தையாரும் முன்னாள் மாவட்ட செயலாளருமான என் பெரியசாமியின் நினைவு இல்லத்தில்,
உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வணங்கிய பின் தாயாாிடம் ஆசி பெற்று போல்பேட்டை அலுவலகத்தில் நிர்வாகிகள் தொண்டர்களை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார். அப்போது கலந்துரையாடலின் போது திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 37 மாத ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு,
இந்தியாவில் நம்பர் ஓன் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இந்த மாநிலத்தில் பல திட்டங்களையும் கொள்கைகளையும் பல மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன. நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி உருவாகுவதற்கு காரணமாக இருந்து இந்தியாவை உள்ளடக்கிய தேசிய மற்றும் மாநில கட்சி தலைவர்களின் நட்புறவோடு கலைஞாின் கொள்கைகளை தூக்கி பிடித்து தொடா்ந்து பணியாற்றி வரும்,
தளபதியார் 2026ல் தேர்தலின் போது 200 தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளார். நாம் செய்த சாதனைகளை எல்லா பகுதிகளுக்கும் கொண்டு சென்று நிர்ணயித்த இலக்கை விட அதிகமான தொகுதியில் வெற்றி பெற அனைவரும் களப்பணியாற்ற வேண்டும்.
மாநகராட்சி பகுதியில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று 27 மாத காலத்தில் எண்ணில் அடங்காத பல பணிகளை செய்துள்ளேன். இவற்றையும் மக்களிடம் கொண்டு சோ்த்து தொடர் வெற்றியை பெறுவதற்கு எல்லோரும் இணைந்தே பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, லாரி புக்கிங் ஏஜெண்ட் சங்கதலைவர் சுப்புராஜ், பொதுக்குழு உறுப்பினர் ஜாண்அலெக்சாண்டர்,
ஒட்டபிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளர் இளையராஜா, அரசு வக்கீல்கள் மோகன்தாஸ் சாமுவேல், மாலாதேவி, மாநகர துணை செயலாளர் கீதாமுருகேசன்,
மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரதீப், தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பார்த்தசாரதி, துைண அமைப்பாளர் தங்கராஜ், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார் உள்பட பலர் வாழ்த்து தொிவித்தனர்.