திமுக மகளிர் தொண்டர் அணியினர் ஆர்ப்பாட்டம்
சங்கரன்கோவிலில் திமுக மகளிர் தொண்டர் அணியினர் ஆர்ப்பாட்டம்.;
Update: 2024-03-16 02:01 GMT
ஆர்ப்பாட்டம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பழைய பேருந்து நிலையம் முன்பு தென்காசி மாவட்ட திமுக மகளிர் தொண்டரணி சார்பாக சங்கரன்கோவில் நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில் தமிழக அரசால் பெண்களுக்கு வழங்கப்படும் உரிமைத் தொகை குறித்து விமர்சனம் செய்த நடிகை குஷ்புவை கண்டித்து ஆர்ப்பாட்டம்நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அமைப்பாளரும் புளியங்குடி நகர்மன்ற தலைவருமான விஜயா சௌந்திரபாண்டியன் மற்றும் மகளிரணி மற்றும் முன்னாள் மாவட்ட மகளிர் அணி செயலாளர் அண்ணாமலை உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.