குஷ்பூ உருவபடத்தை எரித்து திமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்
தமிழக அரசு வழங்கும் மகளிர் உரிமைத் தொகையை குறித்து இழிவாக பேசிய நடிகை குஷ்பூவை கண்டித்து தூத்துக்குடியில் திமுக மகளிர் அணியினர் அவரது உருவ படத்தை எரித்து போராட்டம் நடத்தினர். ;
Update: 2024-03-13 17:55 GMT
ஆர்ப்பாட்டம்
தமிழக அரசு வழங்கும் கலைஞர்மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் பெண்களுக்கு கொடுக்கும் பிச்சை காசு என இழிவாக பேசிய நடிகை குஷ்பு வுக்கு தமிழக முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம் முன்பு பெண்கள் குஷ்பூ உருவப் படத்தை வாரியலால் அடித்து பின்னர் எரித்து தனது கண்டனங்களை பதிவு செய்த பெண்கள் குஷ்புக்கு எதிரான கண்டன கோஷங்களையும் எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.