கள்ளக்குறிச்சியில் திமுக மகளிர் அணி ஆர்ப்பாட்டம் !
மகளிர் உரிமைத் தொகை வழங்குவதை விமர்சித்து பேசிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்புவை கண்டித்து தி.மு.க., மகளிரணி சார்பில் போராட்டம் நடந்தது.;
By : King 24x7 Angel
Update: 2024-03-16 05:18 GMT
ஆர்ப்பாட்டம்
மகளிர் உரிமைத் தொகை வழங்குவதை விமர்சித்து பேசிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்புவை கண்டித்து தி.மு.க., மகளிரணி சார்பில் போராட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட மகளிரணி தலைவர் அஸ்வினி தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் புவனேஸ்வரி உட்பட மகளிரணி நிர்வாகிகள் குஷ்புக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி, அவரது உருவபடத்தை எரித்தனர். நகர செயலாளர் சுப்ராயலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.