குஷ்பு உருவ படத்தை எரித்த திமுக மகளிர் அணியினர்

சிவகாசியில் குஷ்பு உருவ படத்தை திமுக மகளிர் அணியினர் எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

Update: 2024-03-13 14:07 GMT
 சிவகாசியில் குஷ்பு உருவ படத்தை திமுக மகளிர் அணியினர் எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
 விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் குஷ்பு உருவ படத்தை திமுக மகளிர் அணியினர் எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பு மகளிர் உரிமை தொகையை பிச்சை என கூறியதை கண்டித்து சிவகாசி மாநகரம் திருத்தங்கல் அண்ணா சிலை முன்பு குஷ்புவின் உருவ படங்களை திமுக மகளிர் அணியினர் எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.விருதுநகர் வடக்கு மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் பாண்டீஸ்வரி தலைமையில் நடைபெற்ற இந்த உருவ படம் எரிப்பு போராட்டத்தில் மகளிர் அணி நிர்வாகிகள் தமிழரசி, சித்ரா,சிவகாசி மாநகர பகுதி கழக செயலாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News