தி.மு.க. மகளிரணி ஆலோசனை கூட்டம்

Update: 2023-11-21 02:11 GMT

உறுப்பினர் சேர்க்கை படிவம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

  நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் மதுரா செந்தில் அறிவுறுத்தல் படி, மகளிரணி ஆலோசனை கூட்டம் குமாரபாளையத்தில் நடந்தது. குமாரபாளையம் வடக்கு நகரத்தில் நடந்த தி.மு.க. மகளிரணி ஆலோசனை கூட்டத்திற்கு, மாவட்ட தி.மு.க மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ராதிகா தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக நகராட்சி தலைவரும், வடக்கு நகர செயலருமான விஜய்கண்ணன் பங்கேற்று மகளிரணி பணிகளை பாராட்டி பேசினார்.  வரும் நாடாளுமன்ற தேர்தலில் எவ்வாறு பணியாற்றுவது? மகளிர் அணியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, என்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. புதிய மகளிரணி உறுப்பினர் சேர்க்கை படிவத்தை ராதிகா, மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் கயல்விழி உள்பட பலர்,  விஜய்கண்ணனிடம் வழங்கினர்.  அப்படிவத்தினை குமாரபாளையம் வடக்கு நகரத்தில் மகளிர் அணி உறுப்பினர் சேர்ப்பதற்கு நகர மகளிர் அணி மற்றும் நகர மகளிர் தொண்டரணியை சேர்ந்தவர்களிடம்  வழங்கி, எவ்வாறு மகளிர் அணி உறுப்பினர் சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஆலோசனைகளை விஜய்கண்ணன் வழங்கினார்.

Tags:    

Similar News