நாமக்கல்லில் குஷ்புவிற்கு எதிராக ஒன்று திரண்ட திமுக மகளிரணி

நாமக்கல்லில் மகளிர் உரிமை திட்ட பயனாளிகளை இழிவுபடுத்தி பேசிய பாஜக நிர்வாகி நடிகை குஷ்பூவை கண்டித்து திமுக மகளிரணியினர் அவரது உருவ படத்தை காலணியால் அடித்தும், எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-03-13 03:55 GMT

தமிழக அரசு வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் பெண்களுக்கு கொடுக்கும் பிச்சை காசு என இழிவாக பேசிய நடிகை குஷ்புவுக்கு தமிழக முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மகளிா் பயன்பெறும் வகையில், மகளிா் உரிமைத்தொகை திட்டத்தை அறிவித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் மாதந்தோறும் ரூ.1000 வழங்கி வருகிறாா். இத்திட்டம் குறித்து பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்பூ தவறான கருத்துக்களை தெரிவித்துள்ளதாக திமுகவினா் குற்றம்சாட்டியுள்ளனா்.

இதனை கண்டித்து மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் நாமக்கல் மணிக்கூண்டு அருகில் குஷ்பு உருவப் படத்தை காலணியால் அடித்தும், படத்தை எரித்தும் தங்களது கண்டத்தை தெரிவித்தனர்.பிறகு கண்டன கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார் குஷ்பு உருவப் படத்தை தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதில் நாமக்கல் நகர செயலாளர்கள் பூபதி, ராணா ஆனந்த், சிவக்குமார், மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News