திமுகவினர் சென்ற சரக்குவேன் கவிழ்ந்த விபத்தில் இருவர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சியில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்க திமுகவினர் சென்ற சரக்கு வேன் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில், இரண்டு பேர் உயிரிழந்தனர்.

Update: 2024-04-11 04:31 GMT

கள்ளக்குறிச்சியில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்க திமுகவினர் சென்ற சரக்கு வேன் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில், இரண்டு பேர் உயிரிழந்தனர். 

கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் மலையரசனை ஆதரித்து கெங்கவல்லியில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டார். இதில் கலந்து கொள்வதற்காக தலைவாசல் ஒன்றியம் காமக்காபாளையம் கிராமத்தை சேர்ந்த தி. மு.க. தொண்டர்கள் 25 பேர் சரக்கு வேனில் சென்றனர். வண்டியை காமக்காபாளையத்தை சேர்ந்த ராஜதுரை ஓட்டி சென்றுள்ளார். நாவலூர் ஏரிக்கரை பகுதியில் சரக்கு வேன் சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஏரிக்கரை பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது

. இதில் சரக்கு வேனில் சென்ற காமக்காபாளையம் கிராமத்தை சேர்ந்தவரும், தி. மு.க. ஒன்றிய பிரதிநிதியுமான தயாநிதி (வயது 29), அதே ஊரை சேர்ந்த செல்லத்துரை (50) உள்பட வேனில் வந்த அனைவரும் படுகாயம் அடைந்தனர். விபத்து பற்றிய தகவல் அறிந்து விரைந்து வந்த வீரகனூர் போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அப்போது தயாநிதியும், செல்லத்துரையும் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே இறந்தனர். மேலும் சரக்கு வேனில் சென்ற 24 பேரும் ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களில் பள்ளி மாணவி தனலட்சுமி மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News