நெடுஞ்சாலை ஓரத்தில் வாகனங்கள் நிறுத்தக்கூடாது: அதிகாரிகள் எச்சரிக்கை
தர்மபுரி மாவட்டத்தில் நெடுஞ்சாலை ஓரங்களில் வாகனங்கள் நிறுத்தக்கூடாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் நெடுஞ்சாலை ஓரங்களில் வாகனங்கள் நிறுத்தக்கூடாது அதிகாரிகள் எச்சரிக்கை தென்னிந்தியாவின் பெரும்பகுதி மாவட்டங்களில் இருந்து கர்நாடகா,ஆந்திரா உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு செல்லும் வாகனங்கள் பயணிக்கும் பிரதான தேசிய நெடுஞ்சாலை, தர்மபுரி மாவட்டம் வழியாக அமைந்துள்ளது.
இதுதவிர, தர்மபுரியில் இருந்து ஒகேனக்கல் செல்லும் நெடுஞ்சாலை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஓசூர் செல்லும் நெடுஞ்சாலைகள் ஆகியவையும் அமைந்துள்ளன. இந்த சாலைகளில் தினமும் கனரக வாகனங்கள், ட்ரெய்லர் போன்ற நீளமான வாகனங்கள், கார்கள் உள்ளிட்ட இதர வாகனங்கள் செல்கின்றன.
இந்த சாலைகளில் பல இடங்களில் ஆங்காங்கே சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தி வைப்பதால், விபத்துக்கான சூழல் ஏற்படுகிறது. இவ்வாறு வாகனங்கள் நிறுத்துவதை.தடுக்க அதிகாரிகள்.நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது. தர்மபுரி மாவட்டத்தில்.தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டிய நிலையில், 'பல இடங்களில் வாகனங்களை நிறுத்தி வைப்பதை தினசரி காணமுடிகிறது.
கடைகளில் தேநீர் அல்லது உணவு அருந்துதல், பொருட்கள் வாங்குதல்,சிறு ஓய்வு, சிறுநீர் கழித்தல், இயற்கை உபாதை,பழுது உள்ளிட்ட காரணங்களுக்காக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. பழுதாகி நிற்கும் வாகனத்தை அடையாளப்படுத்தும் விதமாக,பெரும்பாலான ஓட்டுநர்கள் மின்னும் எச்சரிக்கை பலகைகள், போக்குவரத்து கூம்புகள் போன்றவை வண்டியை சுற்றி.சாலையில் நிறுத்துகின்றனர்.
இதற்கு வாய்ப்பில்லாத போது அருகிலுள்ள மரக்கிளைகள், கற்கள் போன்றவற்றை எடுத்து சுற்றி வந்து வண்டியை வைத்து எச்சரிக்கை ஏற்படுத்துகின்றனர். ஆனால்,இதர காரணங்களுக்காக வாகனங்களை நிறுத்தும்.பெரும்பாலான ஓட்டுநர்கள், தமது வாகனம் போக்குவரத்துக்கு இடையூறையும், விபத்துக்கான.சூழலையும் ஏற்படுத்துகிறது, என்ற அக்கறை இல்லாமலேயே நிறுத்தி செல்கின்றனர். குறிப்பாக, வாகனங்களில் இடதுபுற சக்கரங்கள் தார்சாலையை ஒட்டியுள்ள மண் பரப்பிலும், வலதுபுற சக்கரங்கள் தார் சாலையிலும் இருக்கும் வகையில் நிறுத்துகின்றனர். இதனால், இருச்சக்கர வாகன ஓட்டிகள் பயணிக்கும் பகுதி ஆக்கிரமிக்கபடுகிறது. இதை கவனிக்காமல் நெடுஞ்சாலையில் பயணிக்கும் கார் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள், அருகில் சென்ற பிறகே நிறுத்தப்பட்டுள்ள.
வாகனங்களை கவனித்துவிட்டு, திடீரென நெடுஞ்சாலைக்குள் நுழைகின்றனர். இதனால் பெரும் ஆபத்து நிகழும் சூழல் ஏற்படுகிறது. எனவே, இயல்பான போக்குவரத்துக்கு சிறிதும் இடையூறு இல்லாத வகையில் வாகனங்களை நிறுத்த இடம் இருந்தால் மட்டுமே, சாலையோரம் வாகனங்களை நிறுத்த வேண்டும். இல்லையெனில், வாகனங்களை நிறுத்த வசதியாக நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே ஏற்படுத்தப்பட்டுள்ள இடவசதியை பயன்படுத்த வேண்டும்.
இதன் மூலம் சிறு விபத்துகள் தொடங்கி பெரும் உயிரிழப்புக்கள் வரை தடுக்க முடியும். இவ்வாறு கூறினார். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், தர்மபுரி மாவட்டத்தில் நெடுஞ்சாலை ஓரங்களில் வாகனங்கள் நிறுத்தக்கூடாது. இதற்காக பார்க்கிங் வசதி உள்ள இடத்தில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும்.
இல்லையென்றால் வாகன ஒட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஹைவே பெட்ரோல் காவல்துறையினர் இதை கண்காணித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.