அரசு மருத்துவமனையில் கேக் வெட்டி கொண்டாடிய மருத்துவர்கள்
மருத்துவர் தினத்தை முன்னிட்டு மருத்துவர்கள் அரசு மருத்துவமனையில் கேக் வெட்டி கொண்டாடினர்.;
Update: 2024-07-01 15:09 GMT
மருத்துவர் தினத்தை முன்னிட்டு மருத்துவர்கள் அரசு மருத்துவமனையில் கேக் வெட்டி கொண்டாடினர்.
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் இன்று (ஜூலை 1) தேசிய மருத்துவர் தினவிழா கொண்டாடபட்டது. தலைமை மருத்துவ அலுவலர் சாந்தி வழிகாட்டுதல் படி நடைபெற்ற இந்த விழாவில் மருத்துவர்கள் சாந்தி சுசீந்திரன்,அமுதா தேவி, அருணாசலம் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் கலந்து கொண்டு கேக் வெட்டி கொண்டாடினார்கள். இந்த விழாவில் செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.