இறந்த மருத்துவர் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கிய மருத்துவர்கள்

புதுக்கோட்டையில் இறந்த மருத்துவர் குடும்பத்தினருக்கு ரூ.7,25,000 நிதி உதவி வழங்கிய மருத்துவர்கள்.

Update: 2024-05-18 14:18 GMT

மருத்துவர் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கல் 

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சேவுகன் தெருவை சேர்ந்த கார்த்திக் மனைவி அஞ்சுதா(32). இவர் மருத்துவராகி பின்னர் மகப்பேறு அறுவை சிகிச்சை நிபுணராகவும்(MD og) உயர் படிப்பை முடித்துள்ளார். அதன் பின் புதுக்கோட்டை இராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராகவும் அவர் பணியாற்றி வந்த நிலையில் கடந்த ஆறு மாதமாக பேறுகால விடுப்பில் இருந்துள்ளார்.

இந்நிலையில் அவர் கடந்த 30ம் தேதி பிரசவத்திற்காக அவர் பணியாற்றிய அதே இராணியார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இரட்டை குழந்தைகளும் பிறந்துள்ளது. ஆனால் அதன் பின்பு அவருக்கு இரத்தப்போக்கு அதிகமாக இருந்ததால் அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் தீவர சிகிச்சை அளித்துள்ளனர்.

இருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி அஞ்சுதா கடந்த 30ம் தேதி இரவு உயிரிழந்தார். பின்னர் அவர் உயிரிழந்த தினங்களிலேயே அவருக்கு பிறந்த இரட்டை குழந்தைகளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இந்நிலையில் தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்கம் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் உள்ள மறைந்த மருத்துவர் அஞ்சுதா இல்லத்திற்க்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ரூ.7,25,000 மதிப்புள்ள காசோலை வழங்கி ஆறுதல் கூறினர்.

பின்னர் கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் மறைந்த மருத்துவர் அஞ்சிதாவுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவர் அஞ்சுதாவின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி மெழுகுவர்த்தி ஏற்றி மொளன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்கம் மற்றும் கறம்பக்குடி அரசு மருத்துவமனை செவிலியர்கள் மருத்துவர் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன் பின்னர் மறைந்த அரசு மருத்துவர் அஞ்சுதாவின் உறவினர்கள் கூறுகையில்... தங்களிடம் இருந்த இடத்தை விற்றுத்தான் அஞ்சுதாவை மருத்துவம் படிக்க வைத்தோம் மருத்துவராக ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பணியாற்றினார். பின்னர் அஞ்சுதா பிரசவத்திற்காக தன்னை தான் பணி புரியும் ராணியார் அரசு மருத்துவமனையிலேயே அனுமதிக்க கேட்டுக் கொண்டார். நாங்களும் அந்த மருத்துவமனையில் அனுமதித்தோம்.

பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்ததாக தெரிவித்த மருத்துவர்கள் அதிக ரத்தப் போக்கினால் இறந்துவிட்டதாக மருத்துவமனையில் தெரிவித்தனர். எங்கள் குடும்பத்தில் ஐந்து பெண்கள் உள்ள நிலையில் அஞ்சிதாவின் தம்பியும் சிறுவனாக உள்ளதால் அஞ்சுதாவே மூத்த மகன் போல் வீட்டை பார்த்துக்கொண்டார்.

அவரின் இழப்பு எங்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்புதான் அஞ்சுதாவின் குடும்பம் தற்போது சிரமத்தில் உள்ள நிலையில் தமிழ்நாடு அரசு அஞ்சுதாவின் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க முன்வர வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News