20 அடி பள்ளத்தில் விழுந்த நாய் 3 நாட்களுக்கு பிறகு மீட்பு

20 அடி பள்ளத்தில் தவறி விழுந்த நாய் மூன்று நாட்களுக்கு பிறகு சமூக ஆர்வலர் ஒருவரின் முயற்சியால் மீட்கப்பட்டது.

Update: 2024-02-02 01:01 GMT

மீட்கப்பட்ட நாய்

திருநகர் 3வது பேருந்து நிறுத்தம் மீனாட்சி தெருவில் வசித்து வருபவர் மனோன்மணி. இவரது வீட்டின் வலது புறம் சிறிய இடம் உண்டு உள்ளது. இவரது வீடு இரண்டு மாடி கட்டிடம் என்பதால் அது 20 அடி பள்ளமாக உள்ளது இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மனோன்மணி வெளியூருக்கு சென்றதால் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் நாய் ஒன்று வீட்டின் மாடியில் இருந்து தவறுதலாக அந்த பள்ளத்தில் விழுந்தது.

இந்த நிலையில் ஊருக்கு சென்று திரும்பி வந்த மனோன்மணி நாய்யை பார்த்து அக்கம் பக்கத்தில் விசாரித்ததில் இரண்டு நாட்களுக்கு மேலாக நாய் அந்த பள்ளத்தில் கிடப்பதாக தெரிவிக்கவே நாயை எப்படியாவது மீட்க வேண்டும் என்று தனக்கன்குளத்தைச் சேர்ந்த உக்கிர பாண்டியன் என்ற சமூக ஆர்வலரை தொடர்பு கொண்டு பள்ளத்தில் விழுந்த நாயை மீட்க உதவி கேட்டுள்ளார்.

உக்கிர பாண்டி திருநகரை சேர்ந்த பாம்பு பிடி வீரர் ஸ்நேக் பாபுக்கு தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு சென்ற ஸ்நேக் பாபு ஏனி மூலம் பள்ளத்தில் இறங்கி தவறி விழுந்த நாயை பத்திரமாக வெளியே கொண்டு வந்தார். வெளியே வந்த நாய் துள்ளி குதித்து ஓடியது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் வெளியே வர வழி இல்லாமல் 20 அடி பள்ளத்தில் மூன்று நாட்களாக மாட்டி தவித்த நாயை யாரும் மீட்காத நிலையில் சமூக ஆர்வலர் ஒருவரின் முயற்சியால் பத்திரமாக மீட்ட பாபுவை அந்தப் பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினார்.

Tags:    

Similar News