கோடை மழையால் கால்நடைகளுக்கு தண்ணீர் பிரச்சனை இல்லை

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 40 நாட்களாக பெய்த மழையால் குளம், குட்டைகளில் தண்ணீர் வரத்து ஏற்பட்டு கால்நடைகளின் தாகத்தை கோடை மழை போக்கியுள்ளது.

Update: 2024-06-18 01:05 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 40 நாட்களாக பெய்த மழையால் குளம், குட்டைகளில் தண்ணீர் வரத்து ஏற்பட்டு கால்நடைகளின் தாகத்தை கோடை மழை போக்கியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 40 நாட்களாக பெய்த மழையால் குளம், குட்டைகளில் தண்ணீர் வரத்து ஏற்பட்டு கால்நடைகளின் தாகத்தை கோடை மழை போக்கியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக பங்குனி மாதம் முதல் ஆவணி மாதம் வரை கடுமையான பெயிலால் நீர்நிலைகள் வற்றி, நிலங்களில் புல்பூண்டுகளில் காய்ந்து சருகாகி கால்நடைகளுக்கு தீவணம் கிடைக்காமல் மேற்கு தொடர்ச்சி மலைகளான கூமாபட்டி பகுதிகளுக்கு வளர்ப்பு ஆடுகளை கொண்டு சென்று காப்பாற்றி வந்தனர். இதனால் கோடை காலத்தில் கால்நடைகளுக்கு மேய்ச்சல் கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டனர்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் பெரு மழைக்கு நீர் நிலைகள் நிரம்பின. ஏப்ரல் மாதம் கடும் வெயிலால் மளமளவென தண்ணீர் வற்றியது. கால்நடைகளுக்கு உலர்ந்த தீவணங்கள் கூட தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த நாற்பது நாட்களாக அவ்வப்போது செய்த மழைக்கு வரும் ஆகஸ்டு மாதம் வரை குடிநீருக்கும் கால்நடைகள் குடிநீருக்கும் தட்டுப்பாடு இருக்காது. தற்போதைய மழைக்கு திசை எங்கும் இலை தழைகள் முளைத்து பசுந்தீவணங்கள் கிடைக்கிறது. இதனால் கால்நடைகளுக்கு பசுந்தீவணங்கள் கிடைப்பதால் கால்நடை வளர்ப்போர் வெகு தூரம் மேய்ச்சலுக்கு செல்ல வேண்டிய நிலை இல்லை. இதனால் கால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.

Tags:    

Similar News