நன்கொடை பத்திரம் விவகாரத்தில் பாஜகவுக்கு தேர்தலில் தக்க பாடம்: அமைச்சர்

தேர்தல் நன்கொடை பத்திரம் விவகாரத்தில் பாஜகவுக்கு தேர்தலில் தக்க பாடம் புகட்டப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-16 13:20 GMT
அமைச்சர் மகேஷ்

தேர்தல் நன்கொடை பத்திரம் விவகாரத்தில் பாஜகவுக்கு வரும் தேர்தலில் தக்க பாடம் புகட்டப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கருத்து தெரிவித்தார்.

தஞ்சாவூரில், சனிக்கிழமையன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது: பி.எம்.சி. திட்டத்துக்கு மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.3,500 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால் தற்போது மூன்று மற்றும் நான்காவது தவணை தொகை மத்திய அரசு இடமிருந்து தமிழகத்துக்கு வரவில்லை. இதுகுறித்து கேட்டபோது நாங்கள் கூறிய அம்சங்களை எல்லாம் கல்வி திட்டத்தில் சேர்க்க வேண்டும் எனக் கூறினார்கள். 

இதுதொடர்பாக முதல்வரிடம் விளக்கினோம். அப்போது முதல்வர் முதலில் அவர்கள் என்ன கூற வருகிறார்கள் என்பதை அறிய கமிட்டி ஒன்று அமைப்போம், அதன்பிறகு அவர்கள் கூறுவது, நமது மாநில கல்வி கொள்கைக்கு உகந்ததா இருக்கிறதா என பார்ப்போம் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மாநில அமைச்சர் என்பதை காட்டிலும் திமுககாரனாக புதிய கல்விக் கொள்கையை நாங்கள் தொடர்ந்து எதிர்க்கிறோம்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா கூறி வருவது மாநில உரிமையை பறிப்பதாக உள்ளது. தமிழ்நாட்டில் அனைத்து சமுதாயத்தினரும் ஒற்றுமையாக உள்ளனர். குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டிப்பாக தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என முதலமைச்சர் கூறியுள்ளார். தேர்தல் பத்திரம் விவகாரத்தில் பாஜகவுக்கு வரும் தேர்தலில் தக்க பாடம் புகட்டப்படும்" என்றார்.

Tags:    

Similar News