செய்யாறு கல்யாண முருகர் ஆலயத்தில் பூசாரிகளுக்கு வஸ்திர தானம்
செய்யாறு அண்ணாநகரில் உள்ள கல்யாண முருகர் ஆலயத்தில் அர்ச்சகர் மற்றும் பூசாரிகளுக்கு வஸ்திர தானம் வழங்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-09 02:56 GMT
பூசாரிகளுக்கு வஸ்திர தானம் வழங்கப்பட்டது
செய்யாறு அண்ணாநகரில் உள்ள கல்யாண முருகர் ஆலயத்தில் அர்ச்சகர் மற்றும் பூசாரிகளுக்கு வஸ்திர தானம். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அண்ணா நகர் பகுதியில் உள்ள அருள்மிகு கல்யாண முருகர் ஆலயத்தில் ஆண்டுதோறும் தனுர் மாதம் சோமவாரத்தை முன்னிட்டு புரோகிதர், அர்ச்சகர் மற்றும் பூசாரிகளுக்கு வஸ்திர தானம் வழங்குவது வழக்கமாக உள்ளது.
அந்த வகையில் செய்யாறு தாலுகாவில் உள்ள கோவில்களின் அர்ச்சகர்கள் மற்றும் பூசாரிகளுக்கு வஸ்திர தானம் வழங்கினர். கல்யாண முருகர் ஆலய ஸ்தாபகரும் நகர பாஜக தலைவருமான கே. வெங்கட்ராமன் 100 க்கும் மேற்பட்ட அர்ச்சகர் மற்றும் பூசாரிகளுக்கு வஸ்திர தானம் வழங்கும் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
மேலும் கல்யாண முருகர் ஆலயத்திற்கு 5 கோபுர கலசங்கள் தானமாக வழங்கினார்.