கஞ்சா கடத்தியவர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கடந்த 2020ல் கஞ்சா கடத்திய வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.;

Update: 2024-02-28 12:12 GMT

  கடந்த 2020ல் கஞ்சா கடத்திய வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.  

கஞ்சா கடத்திய ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் மற்றவர்களுக்கு மூன்று ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சுங்கச்சாவடி பகுதியில் லாரியில் 112 கிலோ கஞ்சாம் பொட்டலங்கள் கடத்தி வந்த மதுரையை சேர்ந்த, முருகானந்தம், பிரபாகரன் ஆகிய இருவரை விழுப்புரம் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் கடந்த 2020 ஆம் ஆண்டு கைது செய்து அவர்களிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Advertisement

இது தொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் போதை பொருள் மற்றும் உள்சார் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் அனைத்து தரப்பு சாட்சிகளின் விசாரணை முடிவடைந்த நிலையில், குற்றவாளியான முருகானந்தனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 3 லட்சம் அபராதமும், இரண்டாவது குற்றவாளியான பிரபாகரனுக்கு மூன்று ஆயுள் தண்டனையும் மற்றும் 3 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி வெங்கடேசன் தீர்ப்பு வழங்கினார்.

Tags:    

Similar News