தண்டவாளத்தில் அறுந்து விழுந்த மின்கம்பிகள்

கன்னியாகுமரியில் வீசிய பலத்த காற்றால் மார்த்தாண்டம் அருகே பள்ளியாடி ரயில்வே பாதையில் ரயில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன.இதனால் ரயில்கள் இயக்கம் நிறுத்தப்பட்டது.

Update: 2024-01-12 07:24 GMT
பள்ளியாடியில் வழியில் நிறுத்திய ரயில்
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று காலை முதலே பலத்த காற்று வீசியது.  இந்த நிலையில் காற்றின் வேகத்திற்கு தாக்க பிடிக்க முடியாமல் மார்த்தாண்டம் அருகே உள்ள பள்ளியாடி ரயில்வே பாதை பகுதியில் ரயில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால் அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.       மின் கம்பிகள் அறுந்து விழுந்த நேரம் சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ஆனந்தபுரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் அந்த வழியாக வந்தது. சம்பவம் அறிந்ததும் அந்த ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. மேலும் அந்த வழித்தடங்களில் செல்லக்கூடிய பல ரயில்களும் ஆங்காங்கே நடுவழியில் நடத்தப்பட்டன.        குறிப்பாக நாகர்கோவிலில் இருந்து புறப்பட்ட கொச்சுவேளி எக்ஸ்பிரஸ், நெல்லை காந்திநகர் -  காந்தி தாம் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நடுவழியில் நடத்தப்பட்டன. கன்னியாகுமரி பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் தாமதமாக புறப்பட்டு சென்றது.. இதனால் பயணிகள் பாதிப்புக்குள்ளாயினர்.        தொடர்ந்து ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மின்கம்பிகள் இணைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேரத்திற்கு பின் ரயில் சேவைகள் மறுபடியும் தொடங்கப்பட்டது.
Tags:    

Similar News