வரதட்சணை: கைக்குழந்தையுடன் கலெக்டர் அலுவலகத்தில் இளம்பெண் தர்ணா

வரதட்சணை கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாகக்கூறி, எட்டு மாத குழந்தையுடன் இளம்பெண் ஒருவர் சேலம், கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா செய்ததால் பரபரப்பு உண்டானது.

Update: 2024-01-08 10:38 GMT

வரதட்சணை கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாகக்கூறி, எட்டு மாத குழந்தையுடன் இளம்பெண் ஒருவர் சேலம், கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா செய்ததால் பரபரப்பு உண்டானது.

சேலம் உடையாபட்டி பெருமாள் கோவில்மேடு பகுதியை சேர்ந்த சுமதி தனது 8 மாத கைக்குழந்தை, தாய், தந்தையுடன் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவர் திடீரென கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதை பார்த்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை சமாதானப்படுத்தி விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து கலெக்டரை சந்தித்து புகார் அளித்து விட்டு சுமதி கூறியதாவது:- எனக்கு திருமணம் ஆகி 18 மாதம் ஆகிறது. 8 மாத குழந்தை உள்ளது. திருமணத்தின்போது எங்கள் வீட்டில் 15 பவுன் நகை மற்றும் சீர்வரிசை கொடுத்தார்கள். தற்போது மேலும் பணம், நகை கேட்டு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடுமைப் படுத்துகின்றனர். இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே வரதட்சணை கொடுமை செய்யும் எனது கணவர், அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News