பூரண மதுவிலக்கை அமல் படுத்த டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

தென்காசியில் பூரண மதுவிலக்கை அமல் படுத்த டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.

Update: 2024-07-03 11:07 GMT

தென்காசியில் பூரண மதுவிலக்கை அமல் படுத்த டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.


புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று குற்றாலத்தில் பத்திரிகை யாளர்களிடம் கூறியதாவது: தேர்தல் வரும். போகும். ஆனால் எங்களது மக்கள் பணி தொய்வில்லாமல் நடக்கும். தென்காசியில் அலுவலகம் திறந்து மனுக்கள் பெற்று உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியை எதிர்பார்த்தோம், ஆனால் கிடைக்கவில்லை. எதிர்காலத்தை எப்படி கணிப்பது, உள்ளாட்சி தேர்தல்களில் எவ்வாறு ஆயத்தமாவது, மதுவிலக்கு, கனிம வளம், மாஞ்சோலை உள்ளிட்ட பிரச்னைகளில் ஆலோசித்து தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படும். மாஞ்சோலை தோட்ட தொழிலாளர் களுக்கு 53 ரூபாய் சம்பளத்திலிருந்து ரூ. 480 சம்பள உயர்வு கிடைக்க எங்களது போராட்டம் தான் காரணம்.

தற்போது காப்புக் காடு என்று கூறி அந்த மக்களை வெளியேற்ற நிர்வாகம் உத்தரவிட்டிருக் கிறது. விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் அதிமுக போட் டியிடவில்லை. இதற்கு முன்பும் பிரதான எதிர்க்கட்சிகள் இடைத்தேர்தலில் போட்டியிடாத வரலாறு உள்ளது. அவர்களின் சவுகரியம் குறித்து முடிவெடுத் துள்ளனர். இதில் நாங்கள் கருத்து சொல்ல இயலாது. புதிய தமிழகம் கட்சி தீண்டாமை, வறுமை, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் உள்ளிட்டவற்றிற்கு எதிராக போராடி வருகிறது. தமிழக அரசு பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என்றார்.

Tags:    

Similar News