பிசானத்தூர் திரௌபதி அம்மன் கோயில் தீமிதித் திருவிழா

பிசானத்தூர் திரௌபதி அம்மன் கோயில் தீமிதித் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

Update: 2024-06-12 12:07 GMT

திரௌபதி அம்மன் கோயில் தீமிதித் திருவிழா

கந்தர்வகோட்டை அருகே திரௌபதி அம்மன் கோயில் தீமிதித் திருவிழா நடைபெற்றது. இக்கோயிலில் தீமிதித் திருவிழா ஜூன் 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து மகாபாரத கதை சொற்பொழிவு விழா மற்றும் தினந்தோறும் மண்டகப்படி நடைபெற்றது. இந்நிலையில் தீமிதிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், விரதமிருந்து காப்பு கட்டியிருந்த 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்கள் வேண்டுதை நிறைவேற்றினர். இந்த விழாவில் சுற்றுவட்டாரகிராமமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை கந்தர்வகோட்டை போலீஸார் செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை பிசானத்தூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். தீமிதித்த போது காயமடைந்தவர்களுக்கு முதலுதவிக்கான முன்னேற்பாடுகள் செய்யப்படாததால் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்.

Tags:    

Similar News