அரசு பள்ளியில் குடிநீர் பற்றாக்குறை: பழுதான மோட்டார் சீரமைக்கப்படுமா?

திருவாலங்காடில் அரசு பள்ளியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், பழுதான மோட்டார் சீரமைக்கப்படுமா? என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Update: 2024-06-13 13:03 GMT

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி 

திருவாலங்காடில் அரசு மேல்நிலைப் பள்ளி பி.டி.ஓ., அலுவலகம் எதிரே அமைந்துள்ளது. இங்கு ஆறு முதல் 12ம் வகுப்பு வரை, 856 மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். மாணவர்கள் குடிநீருக்கு சிரமப்படுவதாகவும் பள்ளி வளாகத்தில் குடிநீர் 24 மணிநேரமும் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையடுத்து பள்ளி வளாகத்தில் 2012- -13ம் ஆண்டு தேசிய ஊரக குடிநீர் திட்டம் வாயிலாக 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டது. இந்த நீர்த்தேக்க தொட்டிக்கு நீரேற்றும் மோட்டார் பழுதடைந்த காரணத்தால் கடந்த மூன்று ஆண்டுகளாக பயன்பாடின்றி உள்ளதுடன் தற்போது பாழடைந்து வருகிறது. இதனால் பள்ளி மாணவர்கள் குடிநீரின்றி சிரமப்படும் நிலை உள்ளது.

எனவே இதனை மீட்டு சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர கல்வி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News