தலைவாசல் அருகே பைக்கில் ஆடு திருடிய டிரைவர் கைது
தலைவாசல் அருகே பைக்கில் ஆடு திருடிய டிரைவர் கைது செய்யப்பட்டார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-07 13:53 GMT
கோப்பு படம்
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே, காட்டுக் கோட்டை, நேரு நகரை சேர்ந்த முருகன் மகன் ராமன், 20. இவர், நெல் அறு வடை இயந்திர டிரைவராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, 10:00 மணியளவில், பைக்கில் ஆடு வைத்துக் கொண்டு வந்துள்ளார். சந்தே கமடைந்த வீரகனுார் போலீசார், அவரை பிடித்து விசாரணை செய்தனர்.
அதில் வீரகனுார், தென்கரை பகுதியில், 10 கிலோ எடை கொண்ட ஆடு திருடி வந் துள்ளதாக ஒப்புக் கொண்டார். அவரை வீரகனுார் போலீசார் கைது செய்தனர்.