வீட்டின் மாடி படியில் தவறி விழுந்து ஓட்டுனர் பலி
மார்த்தாண்டம் அருகே வீட்டின் மாடிப் படியில் ஏறும்போது தவறி விழுந்து ஓட்டுனர் உயிரிழந்தார்.;
Update: 2024-04-30 00:47 GMT
மார்த்தாண்டம் அருகே வீட்டின் மாடிப் படியில் ஏறும்போது தவறி விழுந்து ஓட்டுனர் உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு உள்பட்ட கொடுங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி கார் ஓட்டுநர் தனது பணியை முடித்துவிட்டு உணவு அருந்ததற்காக நேற்று மதியம் வீட்டிற்கு சென்று உள்ளார். அப்போது வீட்டின் படியில் ஏறும்போது கால் தவறி கீழே விழுந்து உள்ளார். இதில் அவரது பின் தலையில் அடிபட்டு மயங்கி விழுந்து உள்ளார்.
உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரவி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.