ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம்,ஆரல்வாய்மொழி அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2024-06-19 05:17 GMT
விபத்து 

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி அருகே  விசுவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் குணசேகர் (47). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்தார். இவருக்கு லதா என்ற மனைவியும் மூன்று பிள்ளைகளும் உள்ளனர்.

இந்த நிலையில் குணசேகர் நேற்று முன்தினம் இரவு சவாரி சென்றார். பின்னர் அங்கு இருந்து மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.        அப்போது எதிர்பாராதவிதமாக ஆட்டோ சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்தது.

Advertisement

இதில் குணசேகர் ஆட்டோவின் அடியில் சிக்கிக்கொண்டார். இதை அடுத்து அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்தில் திரண்டனர்.  உடனே அவர்கள் ஆட்டோவில் சிக்கியிருந்த குணசேகரை மீட்டனர். தலையில் பலத்த காயம் அடைந்தவரை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் குணசேகர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News