நரசிங்கபுரம் காலை உணவுத் திட்டத்தை DRO நேரில் ஆய்வு
ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்குட்பட்ட 13 வது வார்டு பகுதியில் கருமாரியம்மன் கோவில் தெரு பகுதியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு தயார் செய்யும் பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா அவர்கள் அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்
Update: 2024-02-22 09:45 GMT
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமின் இரண்டாம் நாளான இன்று ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 13 வது வார்டு பகுதியில் கருமாரியம்மன் தெருவில் அமைந்துள்ள பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு தயார் செய்யும் பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா அவர்கள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு பல்வேறு ஆலோசனை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர், நரசிபுரம் நகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.