வறட்சியின் பிடியில் கோதையாறு - படகு சவாரி நிறுத்தம்.
விளவங்கோடு அருகே திற்பரப்பு கோதையாறு தண்ணீரின்றி வறண்டு காணப்படுவதால் படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் கோதை ஆற்று நீர் பாய்கிறது. பேச்சுப் பாறை அணை மற்றும் அப்பர் கோதையார் உள்ளிட்ட பகுதியிலிருந்து வரும் தண்ணீர் இந்த ஆற்றின் வழியாக பாய்கிறது திற்பரப்பு அறிவியலும் இந்த தண்ணீர் தான் செல்கிறது. தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதனால் நீர் நிலைகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதுடன் ஆறு குளங்களும் வறண்டு காணப்படுகிறது.
திற்பரப்பு அருவியின் மேற்பகுதியில் கோதையாற்றில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக படகு சவாரியும் செயல்படுகிறது. இந்த நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக ஆற்றில் தண்ணீர் இன்றி பாறைகள் வெளியே தெரியும் அளவில் உள்ளது.இதனால் படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது.அங்கு வரும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.