விவேகானந்தா கல்லூரியில் போதை விழிப்புணர்வு கருத்தரங்கு 

குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் போதை விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது

Update: 2024-02-25 05:33 GMT
போதை விழிப்புணர்வு பிரசுரம் வெளியிடப்பட்டது
குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் போதை விழிப்புணர்வு கருத்தரங்கம் கடற்படை தேசிய மாணவர் படை சார்பில் நடந்தது விழாவுக்கு கல்லூரி முதல்வர் டாக்டர் சி ராஜசேகர் தலைமை தாங்கினார். கல்லூரி என்சிசி அதிகாரியும் செனட் உறுப்பினருமான முனைவர் அ. பிரபுமாறச்சன் வரவேற்று பேசினார். கல்லூரி இயற்பியல் துறை தலைவர் முனைவர் ஜெயந்தி, தமிழ் துறை தலைவர் முனைவர் கு. இளங்குமார், வணிகவியல் துறை தலைவர்  முனைவர்.ஆர் தர்ம ரஜினி , ஆங்கிலத்துறை பேராசிரியர் சுரேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். நாகர்கோவில் போதை விழிப்புணர்வு போலீஸ் ஆய்வாளர் பிரவீனா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு போதை விழிப்புணர்வு பற்றி பேசினார். தொடர்ந்து மாணவ மாணவியர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து விழிப்புணர்வு பிரசுரங்களை போலீஸ் அதிகாரி வெளியிட கல்லூரி முதல்வர் முனைவர் ராஜசேகர் பெற்றுக்கொண்டார். கருத்தரங்கில் விவேகானந்தா கல்லூரி மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். முடிவில் ஆங்கிலத்துறை பேராசிரியர்  க.கவியரசு நன்றி கூறினார்.
Tags:    

Similar News