போதைப்பொருள் விற்பனை செய்தவர்கள் கைது
குமரியில் போதை பொருள்கள் விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் கஞ்சா குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்பவர்களை பிடிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடந்து வருகிறது. இதில் நாகர்கோவில் வடசேரி எஸ்ஐ மேரி மெகபா தலைமையில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சந்திப்பில் நேற்று வாகன தணிக்கை நடந்து கொண்டு இருந்தது.
அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த கிருஷ்ணன் கோவில் மேலத்தெரு பகுதியை சேர்ந்த மணிகண்டன் (46) என்பவரிடம் போலீசார் சோதனை செய்தபோது அவரது அவரிடம் 10 பாட்டில்கள் ஊசி மருந்துகள் மற்றும் 10 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த ஊசி மருந்துகள் நோயாளிகள் தூங்குவதற்காக பயன்படுத்தும் மருந்து ஆகும். இவற்றை பறிமுதல் செய்த போரை சார் மணிகண்டனை கைது செய்தனர். இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதே போல் தக்கலையில் 2 கிலோ கஞ்சாவுடன் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் நேசமணி நகர், பூதப்பாண்டி, கொற்றிக்கோடு, திருவட்டார், அருமனை மார்த்தாண்டம் உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களிலும் கஞ்சா புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்ததாக 22 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து நேற்று இரவு வரை இந்த சோதனை நடைபெற்றது. இது தொடர்பாக பொதுமக்கள் 7010363173 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்குமாறு காவல்துறையினர் கேட்டுள்ளனர்.