தமிழகத்தில் போதைப்பொருட்கள் அதிகரித்து விட்டது -நடிகர் சிங்கமுத்து
தமிழகத்தில் போதைப்பொருட்கள் அதிகரித்து விட்டது என மதகுபட்டியில் நடந்த பரப்புரை கூட்டத்தில் நடிகர் சிங்கமுத்து பேசினார்.;
Update: 2024-04-06 08:23 GMT
தமிழகத்தில் போதைப்பொருட்கள் அதிகரித்து விட்டது என நடிகர் சிங்கமுத்து பேசினார்.
சிவகங்கை மாவட்டம், மதகுபட்டியில் அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸை ஆதரித்து நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் கஞ்சா, மது போதை அதிகரித்துள்ளதாகவும், எனவே வருங்கால சந்ததியினரை பெற்றோர்கள் கண்டித்து வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த அவர், திமுக ஆட்சியில் எதைச் செய்தாலும் வியாபார நோக்கத்தோடுதான் செய்வார்கள். இரட்டை இலைக்கு ஓட்டு போட்டு வெற்றியடைய செய்யுங்கள். இல்லை என்றால் தமிழகம் வளர்ச்சி அடையாததற்கு நாம் காரணமாகி விடுவோம். இந்தியா கெட்டுப்போக நாம் காரணமாகி விடுவோம். ஆதலால் வளமான தமிழகம் மலர்ந்திட இரட்டை இலைக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.