குடிபோதையில் டிரைவிங் : ஒரே நாளில் 52 பேர் கைது !
கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களை குறைக்கும் வகையில் சாலை விதிகளை மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இது போன்று குடிபோதையில் வாகன ஓட்டுபவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களை குறைக்கும் வகையில் சாலை விதிகளை மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இது போன்று குடிபோதையில் வாகன ஓட்டுபவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. விடுமுறை நாட்களான சனி ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவில் வழக்கு பதிவு செய்யப்படுகிறது.
அந்த வகையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் மாவட்ட முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தியதில் குடிபோதையில் வாகன ஓட்டியதாக கன்னியாகுமரி போலீஸ் சரகத்தில் 21 வழக்குகள், தக்கலை துணை போலீஸ் சரகத்தில் 16 , நாகர்கோவில் துணை துணை போலீஸ் சரகத்தில் 6, குளச்சல் துணை போலீஸ் சருகத்தில் 9 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 52 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் உடனடியாக ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இவர்களுக்கு தலா ரூபா 10 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குடிபோதையில் மட்டுமின்றி லைசன்ஸ் இல்லாதது, ஹெல்மெட் இல்லாமல் வருவதை சேர்த்து ஒவ்வொருவருக்கும் தலா 13 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் கூறினர்.குறிப்பாக இரு கடந்த இரு நாட்களில் சுமார் 100 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.