மதுபோதை, சென்டர் மீடியனில் ஹாயாக தூக்கம் - வீடியோ வைரல்

அன்னூரில் சென்டர் மீடியனில் மதுபோதையில் ஹாயாக படுத்த உறங்கிய நபரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Update: 2024-01-10 05:29 GMT

 சென்டர் மீடியனில் தூக்கம் 

கோவை மாவட்டம் அன்னூரில் இருந்து அவிநாசி செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டது.இந்த நிலையில் இன்று அன்னூரில் அவிநாசி சாலையில் பழைய பேரூராட்சி அலுவலகம் பகுதியில் ஒரு நபர் மது போதையில் சென்டர் மீடியன் மீது ஏறி ஹாயாக படுத்து உறங்கிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.போக்குவரத்து அதிகம் நிறைந்த சாலையில் மது போதையில் படுத்த ஆசாமி வெகுநேரமாகியும் அங்கேயே படுத்து கொண்டிருந்தார்.இதனை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Tags:    

Similar News